Friday, February 18, 2022

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

 கிறீஸ்துமஸ் தினத்திற்கான பிரசங்கம் 

சேசுகிறீஸ்துநாதர் சுவாமியின் மூவகை அலுவல் : அர்ச். தாமஸ் அக்வீனாஸ்

"அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" (அரு. 1:4) அர்ச். அருளப்பர் தமது சுவிசே ஷத்தில், குழந்தையாகப் பிறந்தவரான திவ்ய சேசுநாதரை, வார்த்தையானவர் என்று அழைக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தார் (ஒளியும் ஜீவனுமாக இருந்தார்): அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது" இதிலிருந்து, ஆண்டவருடைய மனிதவதாரமானது, மனித ருக்கு மூன்று மடங்கான நன்மைகளை அளிக்கின்றது என்று நாம் அறியலாம்:


1.முதலாவதாக, மனுவுருவான திவ்ய சேசுநாதர்சுவாமி மனிதருக்கு போதிக்கும் வார்த்தையா னவராக விளங்கினார்-"சேசுநாதர், கலிலேயாநாடெங்கும் சுற்றிப்போய், போதித்து, சுவிசேஷத் தைப் பிரசங்கித்தார்” (மத். 4:23); 

ஆண்டவர் மூன்று காரியங்களை நமக்கு போதித்தார் : 

1) உலகிலுள்ள சகல காரியங்களின் தன்மைகளைப் பற்றி விளக்கும் இயற்பியலை கற்பித்தார்: ஆண்டவர், உலகின் மாயத்தன்மையைப் பற்றியும், பசாசின் தீமையைப் பற்றியும், சர்வேசுர னின் வேதசத்தியத்தைப் பற்றியும் போதித்த போது, உலகிலுள்ள சகலத்தினுடைய பண்பு கள் பற்றியே நமக்குக் கற்பித்துள்ளார். 

2) பரிசுத்த வேதாகமத்தினுடைய வேதசாத்தியங்களை போதித்த போது, ஆண்டவர், நமக்கு, உண்மையானதை நிரூபிக்கக்கூடிய காரணகாரியத்திற்கான தருக்கமுறையைகற்பித்தார்: "அப்பொழுது, வேத வாக்கியங்களை உணர்ந்து கொள்ளும் படியாக, அவர்களுடைய புத்தி யைத் தெளிவித்தார்" (லூக். 24:45) 

3)ஜீவியத்தின் பரிசுத்தத்தனத்தைப் பற்றி நமக்கு போதித்தபோது, ஆண்டவர், நல்ல பழக்க வழக்கங்களின் நன்னெறி ஒழுக்கவியலை நமக்குக் கற்பித்தார்: "சாந்த குணமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், தூய இருதயமுடையவர்கள் பாக்கியவான் கள்" (மத்.5:3-12)"நீங்கள் என்னை குருவென்றும், ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள்; நீங்கள் சொல்வது சரியே. ஏனெனில், நான் அவர் தான்” (அரு.13:13) || 


இரண்டாவதாக, மனிதரை ஒளிர்விக்கும் ஒளியாக, திவ்ய சேசு விளங்குகிறார். நம் திவ்ய இரட்சகர் மூன்று வழிகளில், நம்மை ஒளிர்விக்கின்றார்: 

1) பாவத்தின் இரவை அகற்றியதன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். 

2) வரப்பிரசாதத்தின் நாளைக் கொண்டு வந்ததன் மூலம் நம்மை ஒளிர்வித்தார். "இரவு ஏற்கனவே சென்று போயிற்று; பகலோ சமீபமாயிற்று" (ரோமர் 13:13) 

3) உலகின் இருளை அகற்றும்படியாக, அர்ச்சிஷ்டவர்கள் என்னும் மாபெரும் ஒளிரும் விளக் குகளை, உலகம் முழுவதும் பரவச்செய்தார் - " கோணலும் மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வேசுரனுடைய நேர்மையான பிள்ளைகளாகவும், மாசற்றவர்களாகவும் இருப்பீர்கள்.. நீங்கள் அவர்கள் நடுவிலே, ஜீவ வாக்கியத்தைக் கையி லேந்திக் கொண்டு, உலகத்தில் சுடர்களைப்போல் பிரகாசிப்பீர்கள்" (பிலிப். 2:15-16) III. 


மூன்றாவதாக, நித்திய ஜீவியத்தை , திவ்ய சேசுநாதர் நமக்கு அருளினார்: 

1) திவ்ய இரட்சகர், தமது மகிமைமிக்க உத்தானத்தால், பாவத்தளையினின்று நம்மை விடு வித்து, நம் ஜீவியத்தை சீர்படுத்தி, செப்பனிட்டு, உயர்த்தினார்"உத்தானமும் உயிரும் நானே" (அரு. 11:25) 2) 

2) நாம் உத்தம் கிறீஸ்துவர்களாக ஜீவிப்பதற்காக, தேவவரப்பிரசாதத்தை, நமது ஜீவியத்திற்கு அருளிச்செய்தார். ஏனெனில், நான் உயிரோடிருக்கிறேன். நீங்களும் உயிரோடிருப்பீர்கள்' (அரு. 14:19) 3) 

3) மகிமையினுடைய ஜீவியத்தை ஆண்டவர் நமக்கு அருளினார். "நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன்" (அரு. 10:28)


மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

 மூன்று இராஜாக்கள் திருநாளுக்கான பிரசங்கம் மூன்று ஞானிகளும் அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகளும்

அர்ச். தாமஸ் அக்வீனாஸ் "தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னும், தூபவர்க்கமும், மீறையும் அவருக்குப் பாதகாணிக்கை வைத்தார்கள்" (மத்.2:11) இவ்வேதாகம் வாக்கியத்தை வாசிக்கும் போது, முதலாவதாக, மூன்று ஞானிகள் பற்றியும், இரண்டாவதாக, நமதாண்டவருக்கு, அவர்கள் ஒப்புக்கொடுத்த அவர்களுடைய காணிக் கைகள் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 1. இந்தக் காணிக்கைப் பொருட்களை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த மூன்று அரசர்களும், ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய சுவிசேஷமானது, அவர்கள் பல வகை களிலும், ஞானமுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு உணர்த்துவதையே, நாம் முதல் முக்கிய கருத்தாகக் கொள்ள வேண்டும். யூதருடைய இராஜாவாகப்பிறந்திருக்கிறவர் எங்கே? என்று அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து, தர்க்க சாஸ்திரத்தில், அவர்கள் கொண் டிருந்த ஆழ்ந்த அறிவை கண்டுணரலாம். கீழ்த்திசையில், அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை ஆராதிக்க வந்தோம் என்று கூறியதிலிருந்து, நட்சத்திரங்கள் பற்றிய அறிவில், அதாவது, வானசாஸ்திரத்தில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் அறியலாம். கணித சாஸ்திரத்திலும் அவர்கள் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தனர்; முதன்மையான தேவவரப் பிரசாதங்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காண்பிக்கும்படியாக, மூன்று காணிக்கைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆண்டவருக்குப் பாதகாணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர்.

கணித சாஸ்திரிகளான அவர்கள், அர்ச். தமதிரித்துவத்தைக் குறிக்கும் எண், மூன்றினு டைய மதிப்பை நன்கறிந்திருந்தனர். இசையின் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர். இசை, தேவதோத்திரமாக இருப்பதாலும், ஆராதனையில், தேவ தோத்திரம் செலுத்தப்படுவ தாலும், மூன்று ஞானிகளும் தேவபாலனை ஆராதித்தார்கள். ஒழுக்கவியலில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்ததால், எவ்வாறு ஒருவன் தன்னையே தாழ்த்துவது என்பதை அறிந்திருப் பது, உண்மையிலேயே , நல்லொழுக்க அறிவாகும் என்பதால், கீழ்த்திசை இராஜாக்கள் மூவரும், சாஷ்டாங்கமாக, தேவபாலன் முன்பாக தென்டனிட்டு விழுந்து, அவரை ஆராதித்தனர். சர்வத்துக்கும் ஆதிமுதல் காரணராயிருக்கின்ற சர்வாதி கர்த்தராகிய சர்வே சுரனைப்பற்றி, அவர்கள் கொண்டிருந்த அறிவின் மூலமாக, நுண்பொருள் கோட்பாட்டியல் (Metaphysics) பற்றியும் அறிந்திருந்தனர். சர்வேசுரனுடைய தேவ இலட்சணங்கள் பற்றிய மூன்று காரியங்களை, அறிந்திருப்பதை, மூன்று ஞானிகளும், தாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக் கைப்பொருட்கள் வழியாக வெளிப்படுத்தினர்.

இரண்டாவதாக, அவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்கள் பற்றி பார்ப் போம். ஞானிகள், பிறக்கப்போகும் குழந்தை, முதலில், ஆதிகாரணர், அதாவது, சகலத்தை யும் சிருஷ்டித்த சிருஷ்டிகர் என்பதையும், இரண்டாவதாக தேவபாலன், சகலத்தையும் ஆண்டு நடத்துபவர் என்பதையும், மூன்றாவதாக, அவர் சகலத்தையும் புதுப்பிக்கிறவர் என்ப தையும் அறிந்திருந்தனர். அதிகாரத்தையும் வல்லமையையும் அடையாளமாக சுட்டிக்காண்பிக்கும், பொன்னைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலம், தேவபாலன், சகலத்தினு டையவும் சிருஷ்டிகர் என்று, ஞானிகள் அறிவித்தனர். பொன், சர்வத்துக்கும் அதிபதியான அரச அதிகார வல்லமையின் முத்திரையாக திகழ்கிறது.

1) பொன் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

நமதாண்டவரது சிருஷ்டிக்கும் வல்லமையானது மூன்று விதமாகக் காண்பிக்கப்பட்டது.

முதலாவதாக, அவர் சிருஷ்டித்த விதத்தில், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையானது, வெளிப்படுத்தப்பட்டது: "அவர் வாக்கிடவே சகலமும் செய்யப்பட்டது" (சங்.32:9).

இரண்டாவதாக, சர்வேசுரன், உண்டாக்கியவற்றிலிருந்து, அவருடைய சிருஷ்டிக்கும் வல்ல மை வெளிப்பட்டது: "ஆண்டவருடைய கிரியைகள் மகத்தானவை ; அவற்றில் இன்பம் கொள்வோர் அவற்றை உய்த்துணர்வர்” (சங். 110:2).

மூன்றாவதாக, திவ்ய கர்த்தர், ஒன்றுமில் லாமையிலிருந்து சகலத்தையும் படைத்ததால், அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமை நமக்கு உணர்த்தப்படுகின்றது: "ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத் தார். பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது" (ஆதி. 1:1,2). 2)

மீரை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

மீரையை தேவபாலனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஆண்டவர் சகல காரியங்களையும் பாதுகாத்து ஆண்டு நடத்துபவர் என்பதை ஏற்று, உலகிற்கு அறிவிக்கின்ற னர்; ஏனெனில், மீரையானது, மாபெரும் பதப்படுத்தும் பொருள்; மற்ற பொருட்களை அழியா மல் பாதுகாக்கும் குணமுடையது. நமதாண்டவர், மூன்று விதமாக உலகத்தை ஆள்கின்றார்:

முதலாவதாக, பிரபஞ்சத்தின் சகலத்தையும் பாதுகாப்பதன் வழியாக, அதை ஆளுகின்றார். "சகலருக்கும் பொறுத்தலளிக்கிறீர்; ஏனெனில், ஆத்துமங்களை நேசிக்கும் கர்த்தாவே! சகல மும் உமக்கு சொந்தமாயிருக்கின்றன” (ஞான 11:27)

இரண்டாவதாக, உலகில் சகல உயிர்வாழ் பிராணிகளுக்கும் உணவளித்துப் பாதுகாத்து வரு வதன் மூலம், உலகத்தை சர்வேசுரன் ஆள்கின்றார்:"மாமிச தேகமுள்ள யாவருக்கும் ஆகாரம் கொடுத்தருளினார்" (சங். 135:25)

மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதனையும் போஷித்துப் பராமரித்துவருவதன்வழியாக, ஆண்ட வர் உலகத்தை ஆண்டு நடத்துகின்றார்: “தங்கள் தானியம் திராட்சப் பழம் எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்" (சங்.4:7) 3)

தூபம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுதல்.

தூபத்தை, தேவபாலனுக்குக் காணிக்கை யாக ஒப்புக்கொடுத்ததன் மூலமாக, ஞானிகள், ஆண்டவரை, சகலத்தையும் புதுப்பிக்கிற வர் என்பதை, அறிவிக்கின்றனர். தூபமானது சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டு வந் தது. ஆனால், அகில உலகத்தினுடைய பாவ நிவாரண பலியாக, கிறீஸ்துநாதர், சிலுவையில் தம்மையே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தார். என் விண்ணப்பம் தீபதூபமாகவும். உமது சமூகத்தில் ஏறக்கடவது” (சங். 140:2). தூபத்தின் நறுமண சாம்பிராணிப் புகையானது, மூன்று காரியங்களை செய்கிறது.

முதலாவதாக, அது பசாசை ஓட்டுகிறது. மீனுடைய இருதயத்தின் ஒரு துண்டை நெருப்பில் போட்டால், அதிலிருந்து கிளம்பும் புகையானது, ஆண், பெண் அனைவரிடமும் உள்ள எவ்விதப் பேய்களையும் ஓட்டிவிடும். இனிமேல், அவை கிட்ட வராது' (தொபி.6:8).

இரண்டாவதாக, அது பாவிகளைத் தூய்மைப்படுத்துகிறது: "இவர் நம்மை சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவினார்" (காட்சி 1:5)

மூன்றாவதாக, அது உலகத்தை சர்வேசுரனுடன் ஒப்புரவாக்குகின்றது. "கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாசனையுள்ள காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்” (எபேசி 5:2)